38 C
Chennai
Sunday, June 4, 2023

LIVE: ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் – தொல் திருமாவளவன்.!!

இலவச பேருந்து சேவை ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக்,...

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

#HBDTrisha: இளவரசி குந்தவையின் 40வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான த்ரிஷா, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சமூக வலைதளங்களில் அவரது புகழ் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. த்ரிஷாவுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது, மேலும் அவர் பல்வேறு காரணங்களுக்காக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

HBDTrisha
HBDTrisha [Image Source – twitter/@
RamKumarr]

ஒரு பக்கம் ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

 

லியோ படக்குழு வாழ்த்து:

த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவிதக்கும் வகையில், LEO படக்குழு அழகாகவும், வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தை ட்வீட் செய்துள்ளது. அதில், Alexa…அர்ஜூனர் வில்லு பாடலில் வரும், ‘அழகிய தாய் மொழி இவள்’ என்ற வரிகளை பிளே செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், LEO திரைப்படம் த்ரிஷாவின் 67வது படம் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷாவின் திரையுலக பாதை: 

ஒரு பெண் கதாநாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய த்ரிஷா, பல்வேறு கதாபாத்திரங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்கியதால், 2000ம் ஆண்டு தொடக்கம் த்ரிஷாவிற்கு ஒரு சிறந்த காலகட்டமாக அமைந்தது. அவரது  வெற்றிகரமான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்தது.

த்ரிஷா பல்துறை வேடங்களில் நடிக்க விரும்பினார். கமர்ஷியல் படத்தைத் தேர்வு செய்தாலும், அந்தப் படத்தில் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். அதிலும் குறிப்பாக, காதல் பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஒன்றாகமாறியது.

 

அது மட்டும் இல்லங்க….ஆன்-ஸ்கிரீனில் இருப்பது போலவே ஆஃப்-ஸ்கிரீனிலும் இருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே சொல்லலாம். த்ரிஷா சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டார்.படத்தில் அவரது குந்தவை கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக பொருத்திருக்கும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, சினிமாவில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளார்.