30 நாட்களில் 406 பேருக்கு இந்த கொரோனா வைரஸை பரப்ப முடியும் – மத்திய சுகாதார துறை அமைச்சகம்

முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அனைத்து கடைகளும் மக்கள் கூடும் வளாகங்கள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரம் அதிகமாக காணப்பட்டால், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் கசிந்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர் சந்திப்பின் போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ஊரடங்கி நீட்டிப்பது குறித்து, மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார். 

மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டாம். கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றினால், 30 நாட்களில் 406 பேருக்கு பரப்ப முடியும் என தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.