இந்தியாவில் 4,01,078 பேருக்கு தொற்று உறுதி….! 4,187 பேர் உயிரிழப்பு…..!

இந்தியாவில் 4,01,078 பேருக்கு தொற்று உறுதி….! 4,187 பேர் உயிரிழப்பு…..!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். 3,18,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,18,92,676  ஆகவும்,குணமடைந்தோர் எண்ணிக்கை 1,79,30,960 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54,000 பேருக்கும், கர்நாடகாவில் 49,000 பேருக்கும், கேரளாவில் 38,000 பேருக்கும் தொற்றுகள் பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மே 10-ஆம் தேதி முதல் மே – 14ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

மேலும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், ஏழு மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை  கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக விஜயராகவன் அவர்கள் மூன்றாவது கொரோனா வைரஸ் அலையை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube