400 கிமீ சைக்கிள் பயணம்! ஆர்யாவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர் ஆர்யா 400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து வெற்றிகரமாக முடித்து உள்ளதாக, கையில், சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இவர் திரையுலகில் மட்டுமல்லாது, சைக்கிள் பயணத்திலும் சாதனை புரிந்து வருகிறார்.

சைக்கிள் ரேஸில் ஆர்வம் கொண்ட ஆர்யா அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடற்கரை சாலையில் 100 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம்  தெரிவித்திருந்த ஆசார்யா, தற்போது 400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து வெற்றிகரமாக முடித்து உள்ளதாக, கையில்,  சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து,  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் திரை உலக பிரபலங்களும் இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.