இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை மாதாந்திர விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்களைத் திறந்து வைத்தார். இதில் முதல் ஆப்பிள் பிகேசி ஸ்டோர் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில், ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு டெல்லியின் சாகேட்டில் மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது.
Apple CEO Tim Cook opens official store in BKC, Mumbai. pic.twitter.com/74BWRSsmAF
— Indian Tech & Infra (@IndianTechGuide) April 18, 2023
ஒரே நாளில் 10 கோடி விற்பனை:
ஆப்பிள் பிகேசி ஸ்டோர் அதன் தொடக்க நாளில் ரூ.10 கோடி விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது ஒரு பெரிய மொபைல் போன் விற்பனை செய்யும் கடை ஒரு மாதத்திற்கு ஈட்டும் வருவாயுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவு ஆகும். இந்த இரண்டு கடைகளும் திறக்கப்பட்ட நாளில் 6,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

40 லட்சம் வாடகை:
மும்பையில் உள்ள ஆப்பிள் பிகேசி ஸ்டோருடன் ஒப்பிடும்போது ஆப்பிள் சாகெட் ஸ்டாரின் அளவு சிறியதாக இருந்தாலும், இரண்டு விற்பனை நிலையங்களும் ஒரே மாதிரியான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும், ஆப்பிள் நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை விற்பனை நிலையங்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சத்தை வாடகையாக வழங்குகிறது.

25 கோடி வருமானம்:
ரூ.40 லட்சம் வாடகை செலுத்தியும் மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிளின் ஸ்டோர்கள் தலா ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை மாதாந்திர விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பண்டிகை காலங்களில் மொபைல் போன் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும் லாபத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.