,

பெண்களே….! கோடை காலத்தில் மாதவிடாய் வலியை சீராக்க 4 யோகாசனங்கள்.!

By

கோடைக்காலம் வந்தாலே வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவற்றால் அவதி படுவது அனைவரும் தான் . எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் மாதாந்திர மாதவிடாய் வலியை சமாளிப்பதை போதும் போதும் எனபது ஆகிவிடும். குறிப்பாக, மாதவிடாய்க்கு முந்தைய தசைப்பிடிப்பு, வீக்கம், வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அமைதியின்மை ஆகியவை பெண்களிடையே கவலையை ஏற்படுத்தும் ஒரு சில அறிகுறிகளாகும்.

Yoga Asanas
Yoga Asanas [Imagesource : Representative]

ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் தனித்துவமானது, சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை ஒரு பொதுவான குறை என்றாலும், இந்த சிக்கலை தீர்க்க இயற்கை வழிகள் உள்ளன.உங்கள் மாதவிடாயைக் கட்டுப்படுத்த நீங்கள் யோகாவை செய்வதன் மூலம் அது உங்களுக்கு பயனளிக்க கூடும்.

Yoga Asanas
Yoga Asanas [Imagesource : Representative]

யோகா என்பது உடலை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மனதையும் ஆவியையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த பயிற்சியகும். உடல் நிலைகள், சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலம், யோகா மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் அளவை சமன் செய்கிறது.

Yoga Asanas
Yoga Asanas [Imagesource : Representative]

இந்த யோகாசனங்களை செய்வதன் மூலம் பெண்களின் மாதவிடாய் வலியை சீராக்க உதவுகிறது:

Matsyasana
Matsyasana [Imagesource : Representative]

1. மச்சாசனம் (மீன் போஸ்)

மச்சாசனம் செய்வதினால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும், இது ஹார்மோன் சமநிலையை சீராக்கவும் உதவுகிறது. இதனால், கோடை காலங்களில்

Dhanurasana
Dhanurasana [Imagesource : Representative]

2. தனுராசனம் (வில் போஸ்)

தனுராசனம் செய்யும் பொழுது, வயிற்றுப் பகுதிக்கு மென்மையான மசாஜ் செய்ய மேலும் இது இனப்பெருக்க உறுப்புகளை நீட்டி, தொனிக்கிறது. மேலும், இந்த ஆசனம் கருப்பை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Malasana
Malasana [Imagesource : Representative]

3. மலசனா (மாலை போஸ்)

மலாசனா போஸ் இடுப்பு பகுதியில் உள்ள எந்த பதற்றத்தையும் போக்க உதவுகிறது மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு சுழற்சியை மேம்படுத்துகிறது. மேலும், இது ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தலாம்.

Ustrasana
Ustrasana [Imagesource : Representative]

4. உஸ்ட்ராசனா (ஒட்டக போஸ்)

உஸ்ட்ராசனா செய்வதால், வயிற்றுப் பகுதியை நீட்டி, இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி, ஹார்மோன்களை சமநிலை செய்கிறது. மேலும் இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள பதற்றத்தை போக்க உதவுகிறது.