கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுசில்குமார் கூட்டாளிகள் 4 பேர் கைது!

மல்யுத்த வீரர் குமார் கொலைவழக்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டாளிகள் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம்  மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 வீரர்களுடன் மூத்த வீரரான சுசில்குமார் உள்ளிட்ட சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஒரு இளம் மல்யுத்த வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து மூத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் குமாரும் ஒருவர். ஆனால், இவர் இந்த சம்பவத்திற்கு பின் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சுசில்குமார் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் மல்யுத்த வீரர் சுஷில்குமார் இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த சுசில்குமார் பல கட்ட தீவிர தேடுதலுக்கு பின்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுஷில் குமாரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பூபேந்தர், மோகித், குலாப் மற்றும் மன்ஜீத் எனும் 4 சுஷில்குமாரின் கூட்டாளிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.

author avatar
Rebekal