உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு உதவ மேலும் 4 வேகப்பந்துவீச்சாளர் அறிவிப்பு! சென்னை வீரருக்கு இடம்!

20
The Indian cricket team gather before a practice session in the nets ahead of their ICC Champions Trophy semifinal match between Bangladesh and India at Edgbaston in Birmingham, England, Wednesday, June 14, 2017. (AP Photo/Rui Vieira)

உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுத்தால் களைப்பு அடைந்து விடுவார்கள் என மேலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்திற்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நவ்தீப் சைனி, தீபக் சாகர், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் இந்திய அணியின் வலைபந்துவீச்சாளர்களாக செயல்படுவார். இதில் தீபக் சாகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது