சத்தீஸ்கர் மருத்துவமனையில் தீ விபத்தினால் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் 30-க்கும்அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.அதிலும்,கொரோனா வைரஸினால் அதிக பாதிப்பிற்கு உள்ளான 9 பேர் தீவிர சிகிச்சை (ஐசியூ) பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில்,நேற்று மாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  திடீரென மின்கசிவு ஏற்பட்டதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலர் அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.மேலும், தீயானது மருத்துவமனை முழுவதும் பரவியது.இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால்
தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சத்தீஸ்கர் மாநில அரசு உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.