விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு ! ரூ.10 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்

By venu | Published: Jul 03, 2020 12:57 PM

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் வட்டம் ,செக்காரக்குடி கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.நான்குபேரின்  குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.மேலும்   உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc