தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை.
தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சமயத்தில், தமிழ்நாடு காவல்துறையில் (ADGP) அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபிக்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
