சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக

By leena | Published: May 28, 2020 11:16 AM

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில்  உள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கே.கே.நகரைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc