ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது….!

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது சில மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை வாங்க கீழ்ப்பாக்கம் அருகே பொதுமக்கள் நீண்ட வரிசையில்  காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே கொரோனா தடுப்பு மருந்து ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு  விற்கப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மருத்துவர் முகமது இம்ரான் கான் கள்ள சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரூ.4,700 ரூபாய்க்கு வாங்கி  ரூ.20,000-க்கு கள்ள சந்தையில் விற்க முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

அவரிடம் இருந்து 17 மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மருத்துவர் முகமது இம்ரான் கான், இவருக்கு உறுதுணையாக இருந்த மேடவாக்கத்தை சேர்ந்த விஜய், ராஜ்குமார் மற்றும் விக்னேஷ்  ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.