தமிழகத்தில் புதியதாக 360 மருத்துவர்கள் நியமனம்..!

தமிழகத்தில் புதியதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் புதியதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கொரோனா கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளனர்.

பதட்டத்தை தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மக்கள் பதட்டமடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொதுமக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர்.

போலீசார், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்களும் அதிக சுமையுடன் பலமணிநேரம் பணியாற்றுகின்றன. லேசான அறிகுறிகள் பாதிப்புள்ள நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் முற்றுகையிடுவதை தவிர்க்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை புதிய தொற்றுகளுடன் வரும் நோயாளிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
murugan