“டியூப்லைட் ப்யூஸ்” ஆனதால் ரூ. 35 கோடி நஷ்டஈடு கொடுக்க இருக்கிறாராம் சல்மான்கான்.

மும்பை : ரூ.100 கோடி கிளப் நபர் என்று வர்ணிக்கப்படும் சல்மான்கான் நடித்த டியூப்லைட் படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த்தது. ஆரம்பத்தில் வசூல் செய்த இந்த படம் அடுத்த சில நாட்களிலேயே ப்யூஸ் போன பல்ப் ஆகிவிட்டது. வசூல் மிகவும் டல்லாகிவிட்டது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ரிலீஸ் ஆனதும் ரூ.21.15 கோடியை விரைவில் வசூல் செய்த டியூப்லைட் நாளடைவில் வசூலில் படுத்துவிட்டது. இதனால், வெளியான முதல் வாரத்தில் 64.77 கோடி ரூபாயைத்தான் வசூல் செய்துள்ளது.

இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பண நெருக்கடியை சரிகட்ட ரூ.35 கோடி கொடுப்பதாக சல்மான் கான் அறிவித்தார். ஜூலை மாதத்திற்குள் கொடுப்பதாக உறுதியளித்த அவர் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் ஓடிய பிறகும் பணத்தை கண்ணில் காட்டாமல் இருப்பதால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இப்போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக சீக்கிரமே பணம் கைக்கு வரும் என்று சல்மான் தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளதாம்.

Leave a Comment