ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது.!

ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காள் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள், மளிகை கடைகள், போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில நபர்கள் மது வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது .

இந்நிலையில் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று, விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் நெல்லை மாநகர பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் , மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

இந்நிலையில் அதே போல் தாழையுத்து பகுதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அம்பையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் , மேலும் நாங்குநேரி பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் சேரன்மாதேவியில் 8 பேர் மொத்தமாக இவ்வாறு மாவட்டத்தில் 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கிட்டத்தட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.