32 மில்லியன் தவறான பதிவுகள் நீக்கம்.! இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மெட்டாவின் அதிரடி செயல்..!

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில புகார்களில் பயனர்கள் தாங்களாகவே சிக்கலைகளை தீர்ப்பதற்கான வழிகளும், சில புகார்களுக்கு தீர்வுகாண தங்களது சிறப்பு ஆய்வுக்குழு தரவுகளை ஆராய்ந்து, தகவல் தொழில்நுட்ப விதி 2021(IT Rules 2021) இன் படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் மெட்டா, தங்களது தரம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக பகிரப்படும் மற்றும், பார்வையாளர்களுக்கு இடையூறுராக இருக்கும் பதிவுகள் நீக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment