காரைக்குடியில் 30 லட்சம் கள்ளநோட்டுடன் இருவர் சிக்கினர்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக 4 மாதங்களுக்கு மேல் ஒருவர் தங்கியிருந்தார். தகவலறிந்த காரைக்குடி போலீசார் அவரது அறையில் நேற்று மாலை சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.30 லட்சத்துக்கு, புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அங்கு தங்கியிருநவர் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பசீர் (42), இவரை காரைக்குடி அருகே இலுப்பக்குடியை சேர்ந்த பாண்டிசெல்வம் (28) அடிக்கடி சந்தித்ததும் தெரிந்தது. இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Comment