இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் ! – ஹர்தீப் சிங் பூரி

இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்ற இந்தியர்களை மத்திய அரசு சார்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி 14,800 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம் கட்டமாக 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் மூலம் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெறிவித்துள்ளார். 

author avatar
Vidhusan