விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3,000 பள்ளிகள் தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சிபிஎஸ்இ விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்துள்ளோம் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி விடைத்தாள்களை இந்த மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்திருந்தார். மேலும், தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று தகவலும் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்