300 யூனிட் மின்சாரம் இலவசம்;பழைய மின்சார கட்டணங்கள் தள்ளுபடி – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி…!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூலை 11) உறுதியளித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கெஜ்ரிவால்,அம்மாநில மக்களுக்கு நான்கு வாக்குறுதிகளை அளித்தார்.அதன்படி,

  1. மின்சாரத்தைப் பொறுத்தவரை,எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
  2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும்.
  3. பழைய மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  4. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க சிறிது காலஅவகாசம் எடுக்கும், ஆனால் நாங்கள் அதை செய்வோம்”,என்று அறிவித்துள்ளார்.

மேலும்,”பாஜக தலைமையிலான உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 ஆண்டுகளாக முழுமையடையாத பணிகள் டெல்லியில் தமது ஆட்சியில் தற்போது நிறைவடைந்துள்ளன.2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக உத்தரகண்ட் முதல்வரை பாஜக அரசு மாற்றியுள்ளது.இதனால்,ஆளும் கட்சிக்கு முதல்வர் இல்லை. 70 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு கட்சி தனது முதல்வர் பயனற்றது என்று கூறியுள்ளது” என்று கெஜ்ரிவால் கூறினார்.

இதற்கு முன்னதாக,அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக கெஜ்ரிவால் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

6 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

23 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

39 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

51 mins ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

1 hour ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

1 hour ago