கொழும்பு அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது! 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல்

கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

By venu | Published: Apr 25, 2019 05:15 PM

கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் இலங்கை அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்  அவர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட சோதனையில் பிடிபட்டனர்.
Step2: Place in ads Display sections

unicc