இந்திய ஐடி நிறுவனங்களில் 3 மில்லியன் வேலைவாய்ப்புகள்,அடுத்த ஆண்டுக்குள் பறிபோக வாய்ப்பு..!

அடுத்த ஆண்டுக்குள்,இந்திய ஐடி நிறுவனங்களில் 3 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் தொழில்கள் முழுவதும் ஆட்டோமேஷன் மூலமாக மிக விரைவான வேகத்தில் நடைபெறுவதால்,16 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்கள்(ஐடி நிறுவனங்கள்),வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 3 மில்லியனுக்கும் அதிகமான அளவில் தங்களிடம் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும்,இது ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு  வழங்கப்படும் சம்பளத்தில் பெரும்பாலும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த உதவும் என்றும் பாங்க் ஆப் அமெரிக்கா அறிக்கை தெரிவித்துள்ளது .

அறிக்கையின் படி,உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 16 மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர்,அவர்களில் 9 மில்லியன் பேர் குறைந்த திறமையான சேவைகள் மற்றும் பிபிஓ வேலைகளில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில்,ரோபோ செயல்முறை ஆட்டோமேஷன் அல்லது ஆர்.பி.ஏ இன் இயக்கத்தால்,9 மில்லியன் குறைந்த திறமையான சேவைகள் மற்றும் பிபிஓ வேலைகளில் பணிபுரிவோர்களில்,சுமார் 30 சதவீதம் பேர் அல்லது சுமார் 3 மில்லியன் பேரின் பணிகள் பறிபோக வாய்ப்புள்ளது.

அதாவது,டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல், டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட் மற்றும் பிற நிறுவனங்களில்,வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்குள் ஆர்.பி.ஏ-அப் ஸ்கில்லிங் காரணமாக குறைந்த திறமையான பணிகளில் உள்ள 3 மில்லியன் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கவுள்ளதாக தெரிகிறது.இதனால்,100 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த முடியும்.இது மனித உழைப்புக்கு எதிராக 10: 1 வரை குறிப்பிடத்தக்க சேமிப்பைக் குறிக்கிறது.

ரோபோ செயல்முறை தன்னியக்கவாக்கம் (ஆர்.பி.ஏ) என்பது மென்பொருளைப் பயன்படுத்துவதே தவிர,இயல்பான ரோபோக்கள் பயன்படுத்துதல் அல்ல.இதன்மூலமாக,அதிக அளவிலான பணிகளைச் செய்ய, ஊழியர்களை அதிக வேறுபட்ட வேலைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.மேலும்,இது சாதாரண மென்பொருள் பயன்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது.இதனால் சந்தைக்கான நேரம் குறைக்கப்படுகிறது மற்றும் மிகவும் பாரம்பரிய மென்பொருள் தலைமையிலான அணுகுமுறைகளின் செலவை பெரிதும் குறைக்கிறது”,என்று அறிக்கை தெரிவிக்கிறது.