குஜராத் மருந்து உற்பத்தி ஆலையில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.!

காடிலா (Cadila) மருந்து தயாரிப்பு தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள்

By manikandan | Published: May 23, 2020 09:19 PM

காடிலா (Cadila) மருந்து தயாரிப்பு தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 13268 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 802 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், குஜராத்தில் இயங்கி வரும் பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியான காடிலா (Cadila) தொழிற்ச்சாலையில் இதுவரை 26 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc