கோவையில் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவையில் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவையில், ஆயுதப்படையை சேர்ந்த 2 பெண் காவலர்கள் மற்றும்  ஒரு ஆண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியாவில் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.  பாதுகாப்பிற்காக வெளியில் வந்து பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் இருந்த 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில்,ஆயுதப்படையை சேர்ந்த 2 பெண் காவலர்கள் மற்றும்  ஒரு ஆண் காவலருக்கு தொற்று உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube