25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் – திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.

அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால்  அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரத்தை முதலாவதாக  தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி. அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  சாந்தபாடி ஊராட்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Comment