ஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் கட்டணம்… விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்…மு.க.ஸ்டாலின்..!

ஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் கட்டணம்… விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்…மு.க.ஸ்டாலின்..!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதுபோல் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தி பேரின்னலை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13,670 பல் மருத்துவ கல்லூரி கட்டணம் ரூ.11,610 இந்த கட்டணங்களை இந்த இரண்டு கல்லூரிகளிலும் வசூலிப்பது தானே நியாயம். ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 5.44 லட்சம், ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் ரூ.3.85 லட்சம் உயர்த்தியுள்ளது என அதிமுக அரசு. அரசுக்கல்லூரிகள் என்று அறிவித்துவிட்டு, தனியார் கல்லூரியில் உள்ளது போல் கல்வி கட்டணம் வசூல் செய்வது ஏன்? கட்டணம் செலுத்த 30. 11. 2020 இறுதி கெடு விதிக்கப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்.

இது தவிர போஸ்ட் மெட்ரிக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.2 லட்சம் என்று நிர்ணயிப்பது, பல மாணவர்களும் உதவி தொகையை பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும். வருமான வரம்பை ரூ 8 லட்சம் உயர்த்தவேண்டும். நேற்று மாணவர்கள் என்னை சந்தித்தனர். திமுக உறுதுணையாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube