கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ தங்கம் பறிமுதல்!

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ தங்கம் பறிமுதல்!

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ பறிமுதல்.

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில்  விசாரணை மேற்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை விலைமதிப்பற்ற உலோகத்தை கைப்பற்றியது.

இந்த தங்கம், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க துறை தெரிவித்துள்ளது.

இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .1.60 கோடிக்கும் அதிகமாகும். இது இந்த ஆண்டு ஜனவரி முதல் கோழிக்கோடு விமான நிலையத்தில் செய்யப்பட்ட 14 வது பெரிய பறிமுதல் ஆகும். இதனையடுத்து, 4 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube