பிஎஸ்எப் முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். மோதல்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இங்கு, நுழைந்த பயங்கரவாதிகள், கன ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். அங்கு மேலும் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர். தொடர்ந்து இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சுற்றிவளைப்பு: இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை 3.45 மணியளவில், அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த துவங்கினர். உடனடியாக பாதுகாப்பு வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அங்கு சில பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர்.

அவர்களுடன் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் அந்த முகாம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூடல்: பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. காலையில் கிளம்ப வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் விமான நிலையம் திறக்கப்பட்டது. ஆலோசனை: இதனிடையே, பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து, காலை டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment