சொந்த மண்ணில் இலங்கையை பந்தாடியது இந்தியா:3-0 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது!

0
231
கண்டியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் இலங்கை அணியை 3-0 என்று வாஷ் அவுட் செய்துள்ளது இந்திய அணி.
மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்துள்ளது, இந்திய ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சொந்த மண்ணில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது, அந்நாட்டு ரசிகர்களைக் கொதிப்படையவைத்துள்ளது.