2ஜி திருடர்களே! ஊழல் பெருச்சாலிகளே! இது தெய்வீக நாடுடா…!

பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்த திமுகவினர். பதிலடி கொடுத்த பாஜகவினர்.

அதிமுக மற்றும் திமுக இருவருமே மாறி, மாறி வார்த்தைகளால் தாக்கி கொள்வதுண்டு. ஆனால், தற்போது பாஜக மற்றும் திமுக இரு கட்சியினருக்கும் இடையே, ஒரு வித்தியாசமான மோதல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், திமுகவினர் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்திருந்தனர்.

திமுகவின் இந்த செயலுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாஜக இளைஞரணி சார்பில் திமுகவை எதிர்த்து சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த விளம்பரத்தில், “2ஜி திருடர்களே, ஊழல் பெருசாலிகளே, சிசிடிவியே, மூலபத்திரமே….! இது தெய்வீக நாடுடா..! go back ஸ்டாலின்” என எழுதியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment