புரோ கபடி : ஜெய்ப்பூரை விழ்த்தி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது ஹரியானா…!

புரோ கபடி : ஜெய்ப்பூரை விழ்த்தி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது ஹரியானா…!

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
நேற்று நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 12-12 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.  ஆனால் பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இருந்து அபாரமாக ஆடிய அரியாணா அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின்மூலம் இந்த சீசனில் 8-வது வெற்றியைப் பெற்றுள்ள அரியாணா அணி ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *