துாத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு அருகே சாலை விபத்து; 2 பேர் பலி..!

0
143
துாத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியினை சேர்ந்த கிளைட்டன் என்பவரது மகன் கிளிண்டன் (17). இவரது நண்பர் தெற்கு ராஜா தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் டிஜு (18).இருவரும் திருநெல்வேலியில்  உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் கல்லுாரிக்கு  பைக்கில் சென்று வருவர். இன்றும் வழக்கம் போல் கல்லுாரி சென்று விட்டு,உறவினர் வீட்டிற்கும் சென்று விட்டு பைக்கில் திரும்பியுள்ளனர்.பைக்கை டிஜூ ஓட்டியுள்ளார்.

அப்போது வாகைகுளம் அருகே வரும் போது அவர்கள் முன்னே சென்ற லாரி வலது புறம் செல்ல திரும்பியுள்ளது. இதனை எதிர்பாராத அதிக வேகத்தில் வண்டியை ஓட்டி வந்ந மாணவர்கள் லாரியில் மோதாமல் இருக்க பைக்கை திருப்பியுள்ளனர். இதில் சாலை நடுவில் இருக்கும் போர்டில் பைக் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த புதுக்கோட்டை போலீசார் விரைந்து  அங்கு வந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here