உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவு…

புதுடில்லி: உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்.பாராட்டு:மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு டுவிட்டர் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இருதய அறுவை சிகிச்சை:இந்நிலையில் பாகிஸ்தானனில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், “எனது 3 வயது மகளுக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உடனடியாக விசா வழங்கி உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்” எனக்கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த சுஷ்மா, உங்களின் மகள் இருதய அறுவை சிகிச்சைக்காக விசா வழங்கப்படுகிறது. விரைவில் நலம் பெற வேண்டி கொள்கிறோம்” எனக்கூறியுள்ளார்.வாழ்த்துஇதேபோல், பாகிஸ்தானை சேர்ந்த நூர்மா ஹபீப் என்பவர், ” கல்லிரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியா விஷா கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

தயவு செய்து உதவுங்கள். உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்” எனக்கூறியிருந்தார்.சுஷ்மா அளித்த பதிலில் ” இந்தியாவில் கல்லிரல் மாற்று சிகிச்சைக்காக உங்களது தந்தைக்கு விசா வழங்குகிறோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து நீண்டநாள் வாழ வேண்டி கொள்கிறோம்” எனக்கூறிள்ளார்.

Leave a Comment