உத்தரப்பிரதேசத்தில் 290 குழந்தைகள் உயிரிழப்பு…!

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 290 குழந்தைகள் மூளை அழற்சி நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் 213 குழந்தைகள் அலரஜி மற்றும் உடல் நலக்குறைவாலும், 77 குழந்தைகள் மூளை அளற்சி நோயாலும் இறந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மருத்துவமனையில் மட்டும் குழந்தைகள் இறந்த எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது.
கோரக்பூர், பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13 ந் தேதி ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மூளை அழற்ச்சி நோயால் 72 குழந்தைகள் இறந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த இரு மருத்துவர்களை நீக்கி மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்து முதல்வர்ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
ஆனால், அதன்பின்பும், அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பது தொடர்ந்து வந்துள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 73 குழந்தைகள் இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment