கர்நாடகா மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேர் பதவியேற்பு…!

கர்நாடகா மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேர் பதவியேற்பு.

கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில், பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 இந்நிலையில், பிற்பகல் 2.15 மணியளவில், கர்நாடகாவின்  பதவியேற்கும்  நடைபெற்றுள்ளது. இதில், 29 அமைச்சர்கள்  பதவியேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இதில் புதிய அமைச்சர்களாக ஓபிசி சமூகத்தில் 7, எஸ்சி சமூகத்தில் 3, எஸ்டி சமூகத்தில் ஒருவர், லிங்காயத்து சமூகத்தில் 8, ரெட்டி சமூகத்தில் ஒருவர். ஒக்கலிகர் சமூகத்தில் 7 மற்றும் ஒரு பெண்ணிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை  துணை முதல்வர் பதவி ஹெவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.