நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 28ம் தேதி மறியல்!! மா.கம்யூ அறிவிப்பு

சென்னை:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ முடிவு செய்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும்கிடைக்கவில்லை.குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
நீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளித்து மீதமுள்ள இடங்களில் 85 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென மாநில அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளமொத்த இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாநில பாடத்திட்டடத்தில் படித்த மாணவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய பிறகும் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும்” என்று ராமகிருஷ்ணன் தெரிவிததுள்ளார்.
”இக்கோரிக்கையை வலியுறுத்தியும், இதற்காக மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும் 28ம் தேதி அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
author avatar
Castro Murugan

Leave a Comment