முடிவுக்கு வருகிறது 27 ஆண்டு கால வரலாறு.. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரும் 15-யுடன் நிறுத்தம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரை நிறுத்துவதாக அறிவிப்பு.

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை வரும் 15-ஆம் தேதியுடன் நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிரெளசர் (browser) என்றால் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மட்டுமே இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  பிரெளசர் கடந்த 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதன் முதலில் 1995-இல் விண்டோஸ் 95க்கான கூடுதல் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெளியிடப்பட்டது.

பின்னர், அந்நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இலவசமாக வழங்கத் தொடங்கியது. கடந்த 2003-இல் 95% பயன்பாட்டின் உச்சத்தை எட்டிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை, ஆனால் அது அதன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை, பயனர் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறையத் தொடங்கியது. இதற்கு போட்டியாக, சந்தையில் நுழைந்த புதிய தேடுகுறிகள் கணிக்கும் பயனர்களுக்கு இடையேயான தொடர்பை சுலப்படுத்தியது, மேலும், வேகமான இணைய வேகம் மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கத் தொடங்கினர். இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனது சேவையை தொடர முடியவில்லை.

பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த தொடங்கிய நிலையில், அதன் சேவை பயனர்களின் மத்தியில் வெகுவாக குறைய தொடங்கியது. அதாவது, தற்போது கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் வேறு வழியின்றி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நாளை மறுநாள் முதல் தனது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 27 ஆண்டு கால வரலாறு 15-ஆம் தேதி முதல் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here