Mumbai attack

26/11 மும்பை தாக்குதல்.. பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் தான் அடுத்த இலக்கு.! காவல்துறைக்கு வந்த மிரட்டல்.!

By

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது என ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மிரட்டல் விடுத்தவர்கள் 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராக இருங்கள் எனவும் அச்சுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 26/11 பயங்கரவாத தாக்குதல் என்பது 2008ம் ஆண்டு இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.