25 ஆயிரம் தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள் தனிமை – மத்திய அரசு.!

25 ஆயிரம் தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள் தனிமை – மத்திய அரசு.!

தெற்கு டெல்லியில் நிஜாமுதீன் என்ற கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடம் மூடப்பட்டது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில் , நாங்கள் 25,500 உள்ளூர் தொழிலாளர்களையும் மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை  தனிமைப்படுத்தப்படுத்தியுள்ளோம் .

இதுதவிர ஹரியானாவில் சில டி.ஜே மக்கள் தங்கியிருந்த 5 கிராம் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்தியாவில்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1445 பேர் தப்லீக் ஜமாஅத் நிகழ்ச்சியில் கொண்டவர்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 573 பேர் தப்லீக் ஜமாஅத் நிகச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube