பேஸ்புக்கில் புதிய அதிரி,புதிரி அதிரடி மாற்றம்….இனி நாம் போடும் ஸ்டேடஸ்கள் மட்டும் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகுமாம்…!

நியூயார்க்:இனி நாம் பேஸ்புக்கில் மூழ்கிக்கிடக்கும் ஒரு நிலையினை உருவாக்க போகிறது பேஸ்புக் நிறுவனம்.அது எப்படி என்றால் பேஸ்புக்கில் நாம் போடும் சில ஸ்டேடஸ்கள் மட்டும் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகும் வகையில்  பேஸ்புக் செயலியானது விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது பேஸ்புக் நிறுவனம். இது போன்ற ஸ்டேடஸ்கள் போடப்படும் காலத்தில் இருந்து சரியாக 24 மணி நேரத்திற்கு மட்டுமே பேஸ்புக் நிலைத் தகவலில் இடம் பெரும் எனவும் கூறப்படுகிறது.மேலும் மக்களை அதிக அளவில் பேஸ்புக் சமூக வலைத்தளங்களை அதிகமாக ஈர்க்கவே, இந்த அப்டேட்டானது உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இம்மாதிரியான வசதிகளை  முதலில் வாட்சப்பில் தான் கொண்டு வரப்பட்டது.வாட்சப்பில் நாம் போடும் ஸ்டேடஸ்கள் 24 மணி நேரம் மட்டுமே இருக்க கூடிய வகையில் உருவாக்கபட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி அனைவராலும் பாராட்டப்பட்டது. இது வந்த சில தினங்களிலேயே பலரும் நிறைய வாட்சப் ஸ்டேடஸ்கள் போட ஆரம்பித்தனர். அனைவரும் ரயில் போல நீளமாக தங்களது வாட்சப் ஸ்டேடஸ்களை அலங்கரிக்க தொடங்கினர்.

இதில் 30 செகண்ட் வீடியோக்கள் கூட போடா முடியும் என்பது கூடுதல் சிறப்பு. பேஸ்புக்கில் தற்காலிக புரோபைல் பிக்சர் இந்த நிலையில் வாட்சப்பில் ஸ்டேடஸ்கள் வைப்பது போலவே பேஸ்புக்கிலும் தற்காலிகமாக புரோபைல் பிக்சர் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. அதன்படி பேஸ்புக்கில் உலக நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நிறைய பேர் தற்காலிக புரோபைல் பிக்சர் வைக்க ஆரம்பித்தனர். இது தற்போது பெரிய அளவில் மாறியுள்ளது.

அரசியல் கொள்கைகள்,படங்களின் புரொமோஷன்களுக்கு கூட இந்த தற்காலிக புரோபைல் பிக்சர் மாற்றும் வேலைகள் செய்யப்படுகின்றன. வருகிறது பேஸ்புக்கில் புதிய அப்டேட் இப்போது வாட்சப்பில் இருப்பது போலவே பேஸ்புக்கிலும் 24 மணி நேர ஸ்டேடஸ்கள் வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இதன்படி நாம் போடும் ஸ்டேடஸ்கள் பேஸ்புக்கில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த அப்டேட்டின் அதிகாரபூர்வமான அறிவிப்பையும் வெளியிட இருக்கிறது
பேஸ்புக் நிறுவனம் என்பது கூடுதல் தகவல்……..

Leave a Reply

Your email address will not be published.