வருடத்திற்கு 243 கோடி சம்பாதிக்கிறாரா…? ஷாரூக் கான்

ஹிந்தித் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் 10 நட்சத்திரங்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலின் படி நடிகர் ஷாரூக்கான் 243 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார். 2016ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி வரையிலான வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் வசூல், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பளப் பட்டியலை தொகுத்துள்ளார்கள்.
டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள நட்சத்திரங்களும், அவர்களின் வருமானமும்.
1. ஷாரூக்கான் – 243 கோடி
2. சல்மான் கான் – 236 கோடி
3. அக்ஷய் குமார் – 224 கோடி
4. ஆமீர் கான் – 80 கோடி
5. ஹிருத்திக் ரோஷன் – 73.6 கோடி
6. தீபிகா படுகோனே – 70 கோடி
7. ரன்வீர் சிங் – 64 கோடி
8. பிரியங்கா சோப்ரா – 64 கோடி
9. அமிதாப்பச்சன் – 57 கோடி
10. ரன்பீர் கபூர் – 54 கோடி
ஹிந்தித் திரையுலகின் அதிக சம்பளம் பெறும் டாப் 10 நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பெற்ற ஷாரூக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் டாப் 10 நட்சத்திரங்களின் பட்டியலில் முறையே 8, 9, 10வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

Leave a Comment