கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு..!

கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசில் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட் டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றனர்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட யு.டி. காதர், கடந்த 24-ம் தேதி சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று, கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு முதன்முறையாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, எச்.கே.பாட்டில், மது பங்காரப்பா உள்ளிட்ட 24 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.