ம.நீ.ம பொதுச் செயலாளர் முருகானந்தம் உட்பட 2,200 பேர் ராஜினாமா.!

மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு , சுற்றுசூழல் பிரிவு மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பிலிருக்கும் நாங்கள், தற்பொழுது கட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு குழப்பங்களினாலும் அதை தலைமை திறம்பட கையாள தவறவிட்டுவிட்டதாலும், கட்சியில் வெளிப்படை தன்மை இல்லாமலும், மேல்மட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையான முறையில் கூட்டனி அமைத்து, தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைய காரணமாக இருந்ததை நினைத்தும் மிகுந்த வேதனை அடைந்து, நாங்கள், அனைவரும் எங்களுடைய பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அரட்டை றுப்பினரிலிருந்தும் ராஜினாமா செய்கிறோம்.

மேலும் குறிப்பாக பொது செயலாளர் M. முருகானந்தம், அவர்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட 414 வாக்கு சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 கிளை செயலாளர்கள் மற்றும் 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் ஆக 2200 பேரும் தங்களது பொறுப்புகளையும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் ராஜினாமா செய்து பொது செயலாளர் அவர்களுடன் கட்சியிலிருந்து விலகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலஹாசனின் சர்வாதிகாரப் போக்கினால் தேர்தலில் தோல்வி அடைந்ததாக முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு 100 தொகுதிகள் ஒதுக்கியது தோல்விக்கு காரணம். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட நமது கட்சியில் ஆள் இல்லை என கமல் கூறியது உறுத்தலாக உள்ளது என முருகானந்தம் பேட்டியளித்துள்ளார்.

author avatar
murugan