இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு தொற்று உறுதி..! 3,847 பேர் உயிரிழப்பு…!

corona virus

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,11,298 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 3,847 ஆகவும் பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 தேதி முதல் 3 லட்சத்தை கடந்து வந்த தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,73,69,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் இறப்பு எண்ணிக்கை 3,847 ஆக கடந்த 24 மணி நேரத்தில்  பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,15,235 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில்  2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
  • இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  24,19,907 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை நாட்டின் இதுவரை  20,26,95,874  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.