2,100 ரூபாய் மதிப்பில் ஹானர் பேண்ட் 4! இந்தியாவில் எப்போ அறிமுகம்?!

ஹவாய் நிறுவனம் புதிதாக ஹானர் 8சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சீனாவில் ஹானர் பேண்ட் 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் இந்திய மதிப்பு ருபாய் 2,100ஆக உள்ளது.இன்னும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை .

இந்த பேண்ட் 4 ஆனது, 3 வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை இந்த பேண்ட் 0.95″ அமோல்டு டச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. மேலும், இது நமது இதய துடிப்பு , நடை பயிற்சி, நீச்சல் வேகம், நமது போனின் வாய்ஸ் கால்ஸ், மெஸேஜ் என அனைத்தையும் காணக்கிட்டு சொல்கிறது.

இந்த பேண்ட் வாட்டர் ரெசிஸ்டென்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸில் ப்ளூடூத் 4.2 வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேண்ட் 23 கிராம் எடை கொண்டதாக உள்ளது.

DINASUVADU