21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரிக்கு மேல் குணமடைந்துள்ளனர்.!

குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும்

By murugan | Published: Jul 06, 2020 10:55 AM

குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதத்தை விட  அதிக வீதத்தை  கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட மத்திய அமைச்சின் தகவல்கள் படி, இந்தியாவில், நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சமாக உயர்ந்தது, இறந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் நேற்றுவரை  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  4,09,082 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தேசிய சராசரியை விட கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதத்துடன் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

அதன்படி,  சண்டிகர் (85.9 சதவீதம்), லடாக் (82.2 சதவீதம்), உத்தரகண்ட் (80.9 சதவீதம்), சத்தீஸ்கர் (80.6 சதவீதம்), ராஜஸ்தான் (80.1 சதவீதம்), மிசோரம் (79.3 சதவீதம்), திரிபுரா ( 77.7 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (76.9 சதவீதம்), ஜார்க்கண்ட் (74.3 சதவீதம்), பீகார் (74.2 சதவீதம்), ஹரியானா (74.1 சதவீதம்), குஜராத் (71.9 சதவீதம்), பஞ்சாப் (70.5 சதவீதம்), டெல்லி ( 70.2 சதவீதம்), மேகாலயா (69.4 சதவீதம்), ஒடிசா (69.0 சதவீதம்), உத்தரபிரதேசம் (68.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (67.3 சதவீதம்), மேற்கு வங்கம் (66.7 சதவீதம்), அசாம் (62.4 சதவீதம்), மற்றும் ஜம்மு-காஷ்மீர் (62.4 சதவீதம்)

Step2: Place in ads Display sections

unicc