நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்த சோக சம்பவம்.!

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக

By gowtham | Published: Jun 03, 2020 03:43 PM

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

தெற்கு அசாமில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள லக்கிபூர் பகுதிக்கு அருகிலுள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலரும் காயமடைந்த நிலையில்,21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

3 இடங்களில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நான்கு சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதற்கு அசாம் மாநிலம் அரசு இரங்கலை தெரிவித்துள்ளது.மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 

Step2: Place in ads Display sections

unicc