இனி அத்திவரதர் 2059-ம் ஆண்டு தான்… !நள்ளிரவில் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்!

அத்திவரதர் வைபவத்தின் 48-வது நாளான நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆகம விதி படி அத்திவரதரை வைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதர் வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி  மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார்.

அவர் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டது.40 வருடங்கள் அத்திவரதர் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூலிகை கலந்த தைலக்காப்பு பூசப்பட்டு உள்ளது.அத்திவரதர் சிலை வைக்கப்பட்டதும் காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் மழை பெய்தது.அத்திவரதர் சிலை வைத்த பின் ஐதீகம் படி மழை பெய்ததாக  அப்பகுதி மக்கள் கூறினார்.

இனி அத்திவரதர் 2059-ம் ஆண்டு அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுத்து மக்களுக்கு காட்சியளிப்பார்.

 

author avatar
murugan