மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 20,48,960 தடுப்பூசிகள்? – மத்திய அரசு..!

அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், முன்பை விட சற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அதனை இலவசமாக வினியோகம் செய்யும் என அறிவித்தார்.

இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 31.51 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வினியோகம் செய்துள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

 

author avatar
murugan